படப்பிடிப்புக்கு சிறிது நேரம் லேட்டாக வந்தால் கூட கன்னத்தில் அறைந்துவிடுவார் தெலுங்கு நடிகர் மோகன்பாபு. அவரது 'பஞ்ச்'வாலிடி பொறுக்க முடியாமல் கதற கதற அழுகிற நடிகைகள் ஆந்திராவில் நிறைய! ஐயோ பாவம்... டாப்ஸியின் கன்னங்களும் கவலைக்குரியதாக மாறும் போலிருக்கிறது இருக்கிற நிலைமையை பார்த்தால்.
ஆடுகளம் படத்தின் மூலம் வெள்ளாவிப் பெண்ணாக தமிழ்நாட்டு இளசுளை கலங்கடித்திருகிறார் டாப்ஸி. இந்த படம் முடிவதற்குள்ளாகவே இந்தி படத்தில் அமிதாப்புடன் நடிக்கிற வாய்ப்பு வந்தது இவருக்கு. ஆனால் அதற்கு முன்பே மோகன்பாபுவின் மூத்த மகனுடன் நடிப்பதற்காக கை நீட்டி அட்வான்சும் வாங்கியிருந்தாராம். கால்ஷீட் கொடுத்திருந்ததும் இந்த மாதத்தில்தான்.
தனக்கு கொடுத்த தேதிகளில் படப்பிடிப்புக்கு வராமல் மும்பைக்கு பறந்துவிட்ட டாப்ஸியை ஆந்திராவுக்கு வரவழைத்து 'ஆராதனை' செய்ய தயாராகிவிட்டார் மோகன்பாபு. அங்குள்ள தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறாராம். ஆந்திராவில் கால் வைக்கவே அஞ்சிக் கொண்டிருக்கிறார் டாப்ஸி!
No comments:
Post a Comment