அமெரிக்காவின் பல்வேறு ரகசியங்களை அமெரிக்காவில் “விக்கி லீக்” இணைய தளம் வெளியிட்டு வருகிறது. இப்போது இந்தியா தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனில் நடந்த ஆய்வு பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நடந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று 2008-ம் ஆண்டு பென் டகனில் ஆய்வு செய்து உள்ளனர். இரு நாட்டிலும் 1 கோடியே 20 லட்சம் பேர் பலியாவார்கள். இதனால் உலக அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று கணித்து உள்ளனர். பென்டகன் கோப்பில் இருந்த இந்த தகவலை விக்கி லீக் வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவில் ஹிலாரிக்கு முன்பு வெளி யுறவு மந்திரியாக இருந்த காண்டலிசா ரைஸ் சிரியாவுக்கு இந்தியா ரசாயன பொருட்களை கொடுக்க கூடாது என்று வற்புறுத்தி உள்ளார். இந்த ஆவணத் தையும் விக்கி லீக் வெளியிட்டு உள்ளது.
சிரியா ரசயான ஆயுதங்களை தயாரிக்க முயற்சிப்பதாக கருதி அமெரிக்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. சிரியா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் நீண்ட தூர ஏவுகணை தயாரித்தது பற்றியும் பென்ட கனில் விவாதித்ததாக விக்கி லீக் தகவல் வெளியிட்டு உள்ளது.
No comments:
Post a Comment