பரங்கிக் காய்க்கு விதை போட்டு, சுண்டைக்காயை அறுவடை செஞ்ச கதையாக இருக்கிறது பெரிய படங்களின் பட்ஜெட்டும், ரிசல்ட்டும்! இந்த நிலையில் மேலும் மேலும் செலவு செய்யவே ஆசைப்படுகிறார்கள் ஹீரோக்கள்!
அடுத்த செலவுக்கு ஆவலோடு பட்ஜெட் போட ஆரம்பித்திருக்கிறார் உலக நாயகன். டைரக்டர் செல்வராகவன் இயக்கப் போகும் படத்தில் கமல் நடிக்கப் போவதாக கடந்த வாரத்தில் சிலிர்த்துக் கொண்டது கோடம்பாக்கம். ஒரு உறையில் இரு வாள்கள் இருக்கவே முடியாது என்பான் புத்திசாலி. இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு ஷாட் கூட வைக்க முடியாது என்று ஜோதிடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இப்பவே.
எனவே, தானே இயக்கி தயாரிக்கும்படி ஒரு கதையையும், அதற்கான தயாரிப்பாளரையும் கைக்குள் கொண்டு வந்துவிட்டாராம் கலைஞானி. அந்த தயாரிப்பாளர்தான் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வேலாயுதம் முடிந்த கையோடு இந்த படத்தைதான் துவங்கப் போகிறாராம் ரவி. கமல் இயக்கி நடிக்கப் போகும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் ரவி தேஜாவும் கூட நடிக்கிறார்களாம். அப்படியே நம்ம சூர்யாவுக்கும் ஒரு ரோல் வைத்திருக்கிறாராம் கமல்.
'அம்பு' கிழிச்ச இதயத்தை இந்த படமாவது தைக்குமான்னு தெரியல!
No comments:
Post a Comment