கால்ஷீட் கேட்டு வருகிறவர்களை கழற்றிவிடுவதற்கென்றே சில ரேட் வைத்திருப்பார்கள் ஹீரோக்கள்! கார்த்தியின் ரேட்டும் அப்படிதான் இருக்கும் என்று அனுமானிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் சிறுத்தைக்கு பிறகு அவர் கேட்கும் சம்பளம், அவரது அண்ணன் கேட்பதை விட அதிகமாக இருக்கிறதாம். இதனால் சிறுத்தையை நேரில் பார்த்தது மாதிரியே சிதறி ஓடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
ஆனால் கார்த்தி அதிக சம்பளம் கேட்பதில் ஒன்றும் தப்பில்லை. சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர் ஒருவரின் பட வசூலை விட சிறுத்தையின் வசூல் அதிகம். அதுமட்டுல்ல, மேற்படி நடிகரின் படம் இரண்டு வாரங்களில் ஈட்டிய வசூலை ஒரே வாரத்தில் பார்த்துவிட்டது சிறுத்தை. இதையெல்லாம் மனதில் வைத்துதான் கார்த்தி அதிக சம்பளம் கேட்கிறார் என்று அவருக்கு சாதமாக பேசுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கால்ஷீட் கேட்டு வருகிற எல்லாரையும் சிதறி ஓட வைத்தபின் எஞ்சி நிற்கிற தயாரிப்பாளரை வைத்துதானே அடுத்த படத்தை துவங்க முடியும்? வழக்கம்போல கார்த்தியின் அடுத்த படத்தையும் அவரது நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறாராம். இந்த படத்தை இயக்கப் போவது தெலுங்கில் முன்னணி இயக்குனராக திகழும் பொம்ரிலு பாஸ்கராக இருக்கும் என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.
யாரு வேணா மாறலாம், ஹீரோயின் மட்டும் அந்த வெள்ளை வெளேர் நடிகைதானே கார்த்தி?
No comments:
Post a Comment