நீதிமன்ற உத்தரவுப்படி தாய் வனிதாவுடன் செல்ல மறுக்கும் 9 வயது விஜய்ஸ்ரீஹரிக்கு மனோதத்துவ பரிசோதனை நடத்தும்படி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகன் விஜய்ஸ்ரீஹரிக்காக தந்தை விஜயகுமாருடன் தொடங்கிய வனிதாவின் சண்டை, இப்போது முன்னாள் கணவரிடம் வந்து நிற்கிறது.
தீபாவளிக்காக அப்பா வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்தார் வனிதா. வந்த இடத்தில் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை மட்டும் அனுப்ப மறுத்த விஜயகுமார், அவனை வனிதாவின் முன்னால் கணவர் ஆகாஷிடம் ஒப்படைத்துவிட்டார். விஜய்ஸ்ரீஹரியை வளர்க்கும் பொறுப்பை வனிதாவிடமே ஒப்படைத்துள்ளது நீதிமன்றம்.
எனவே மகனை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போனார் வனிதா. விஜய்ஸ்ரீஹரியை தன்னிடமே விட வேண்டும் என்று ஆகாஷும் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழந்தையை உடனடியாக வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆகாஷுக்கு உத்தரவிட்டனர். ஆனால் அவர் ஒப்படைக்கவில்லை. குழந்தை தாயிடம் செல்ல மறுப்பதாகக் கூறிவிட்டார். விஜய் ஸ்ரீஹரியும் வனிதாவிடம் போக மாட்டேன் என்று கூறி வருகிறான்.
நீதிமன்ற தனியறையில் தாயையும் மகனையும் சந்திக்க வைத்த போதும், அவன் பிடிவாத வர மறுத்துவிட்டான்.
இந்த நிலையில் ஆகாஷ் மற்றும் வனிதாவின் வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இந்த விவகாரத்தில் விஜய் ஸ்ரீஹரியை சமாதானம் செய்வதற்கு 2 தரப்பினராலுமே முடியவில்லை. தாய் வனிதாவுடன் செல்வதற்கு அவன் மிகவும் ஆணித்தரமாக மறுக்கிறான். ஆனாலும் அவனை வனிதாவின் வீட்டில் விட்டுவிட்டு பின்னர் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு தயாராக இருப்பதாக ஆகாஷ் குறிப்பிட்டார்.
அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் வனிதா இருக்கும் தெருவுக்குள் நுழைந்ததுமே அங்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. அந்த சம்பவங்கள் பத்திரிகைகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. எனவே விஜய் ஸ்ரீஹரியை தாயிடம் ஒப்படைப்பது இயலாததாகவே ஆகிவிட்டது.
தாயுடன் தனியாக சந்திப்பு...
ஒருவேளை அவனது மனதில் ஏதாவது கருத்து திணிக்கப்பட்டு இருந்தால் அதை நீக்குவதற்காக அவனை தனியாக சந்திக்க அனுமதிக்கும்படி வனிதா கேட்டுக்கொண்டார். அதுவும் ஏற்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களுக்குள் மேலும் பல விளைவுகளை அந்த சந்திப்பு ஏற்படுத்திவிட்டது.
இந்த அளவுக்கு, தாயாகிய தன்னை மகன் வெறுப்பதற்கு காரணமே, அவனது மனதில் மனுதாரர் தரப்பினர் பல மாற்றுக் கருத்துகளை விதைத்துவிட்டனர் என்று வனிதா குற்றம்சாட்டினார். எனவே அவனை குழந்தைகள் மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச்சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மிக சவாலான வழக்கு...
ஆனால் அதற்கு ஆகாஷ் தரப்பினர் மறுத்தனர். அவன் மற்ற குழந்தைகளைப்போல் சாதாரணமாகத்தான் இருக்கிறான். நாங்கள் எதுவும் அவனிடம் கூறி அவனது மனதை கலைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
ஒரு நீதிபதியாக இருந்து இதுவரை நான் கையாண்ட வழக்குகளில் இதுதான் எனக்கு சவாலான வழக்காக உள்ளது. ஒரு 9 வயது குழந்தையின் நலனே முக்கியம் என்ற அளவில் இந்த வழக்கை நான் கையாளுகிறேன்.
வனிதா மற்றும் அவரது 2-ம் கணவர் மாற்றுத் தந்தையுமான ஆனந்தராஜனுடன் வசித்தபோது விஜய் ஸ்ரீஹரிக்கு சில துன்பமாக நிகழ்வுகள் நடந்து, அதன் மூலம் அவனுக்கு இந்த அளவுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. அல்லது, வனிதாவிடம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஆகாஷ் அவனை இந்த அளவுக்கு அவனது மனதை கலைத்து தன்வசப்படுத்தி இருக்க முடியும்.
'உண்மையைக் கண்டுபிடிப்பது கடமை'
எனவே இதில் சரியான உண்மை எது என்பது தெரிந்தால்தான் அதற்கேற்ற வழிமுறைகளைக் காணமுடியும். அந்த உண்மையை கண்டுபிடிப்பதற்கு மருத்துவ நிபுணர்களின் பரிசோதனை அவசியம்.
வனிதாவோ அல்லது ஆகாஷுக்கோ உதவுவதற்காக அல்ல, சில மாதங்களாக கடுமையான மனசஞ்சலத்தில் இருக்கும் அந்த குழந்தைக்கு ஒரு விடிவுகாலம் பிறப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையாகும். குழந்தைகள் மற்றும் மனநலன் பாதித்தவர்களின் நலனை பாதுகாப்பது கோர்ட்டின் கடமை.
குழந்தை மனோதத்துவ நிபுணர்கள்
எனவே சென்னை எழும்பூரிலுள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், `சைல்ட் கைடன்ஸ் கிளீனிக்'கில் பணியாற்றும் துறைத் தலைவர் டாக்டர் வி.ஜெயந்தினியிடம் 6-ந் தேதிக்குள் விஜய் ஸ்ரீஹரி அழைத்துச் செல்லப்பட வேண்டும். தன்னுடன் உள்ள நிபுணர் குழுவை வைத்து நந்தனத்தில் உள்ள மையத்தில் வைத்து அந்தக் குழந்தையை ஜெயந்தினி பரிசோதனை செய்ய வேண்டும்.
அந்த குழந்தையின் ஆழ்மனதில் உள்ளது என்ன? அல்லது, மற்றவர்களின் நிர்ப்பந்தத்தின்படி அந்த குழந்தை செயல்படுகிறதா? என்பதை கண்டறிய வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை 14-ந் தேதிக்குள் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தற்போதைய நிலையே நீடிக்கும்
அந்தக் குழந்தையோடு ஆகாஷும், வனிதாவும் சேர்ந்து நிபுணர்களிடம் சாதாரண முறையில் உரையாற்ற வேண்டும். அப்போது பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது. நிபுணர்கள் கூறினால், ஆகாஷும், வனிதாவும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். நிபுணர்களின் அறிக்கை வரும்வரை தற்போதைய நிலையே நீடிக்கும். அடுத்த விசாரணை 15-ந் தேதி நடைபெறும்..." என்றார்

No comments:
Post a Comment