வெள்ளாவிப் பெண் டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் கொடுத்திருப்பது நம் தமிழகத்தில் அல்ல; ஆந்திராவில்! நடிகை டாப்ஸிக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகிடைத்ததோ இல்லையோ... தெலுங்குத் திரையுலகில் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. பாலிவுட்டில் அமிதாப் படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்து விட்ட டாப்ஸி தெலுங்கில் தனி கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அம்மணி பற்றி தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஏனாம்? படப்பிடிப்பிற்கு கொஞ்சம் லேட்டாக வந்தாலே கன்னம் பழுக்கும் அளவுக்கு அறைந்து விடும் குணமுடைய நடிகர் மோகன்பாபு இயக்கவிருக்கும் புதிய தெலுங்கு படமொன்றில் டாப்ஸி கமிட் ஆகியிருக்கிறார். ஜனவரியிலேயே சூட்டிங்கில் பங்கேற்க வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் அம்மணியோ தமிழ் திரையுலகில் கொடி நாட்டிவிட்டு, நேராக மும்பைக்கு பறந்து விட்டார். டாப்ஸி வருவார் என காத்திருந்த மோகன்பாபு அண்ட் கோவினர் ரொம்பவே டென்ஷனாகி, அம்மணிக்கு கால்மேல் கால் போட்டிருக்கிறார்கள். நோ ரெஸ்பான்ஸ்.
இதுதொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் செய்திருக்கிறார் மோகன் பாபு. சூட்டிங்கிற்கு அரைமணி நேரம் லேட் ஆனாலே கையை நீட்டும் மோகன்பாபு, கைநீட்டி அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் கம்பி நீட்டிய டாப்ஸிக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறாரோ? ஆந்திர மண்ணில் கால் வைக்கவே தயங்கிக் கொண்டிருக்கிறாராம் டாப்ஸி.
No comments:
Post a Comment