பாமக விவகாரத்தில், தனது அதிரடியால், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் கருணாநிதி என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பாமக கூட்டணியில் இருப்பதாக டெல்லியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அந்தப் பேட்டிக்கு முன்பு வரை பாமகவினரை பகிரங்கமாக அழைத்து திமுக தரப்பு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கவில்லை. மாறாக அதற்காக சந்தித்தோம், இதற்காக சந்தித்தோம் என்ற போர்வையில்தான், அதாவது கிட்டத்தட்ட ரகசியமான முறையில்தான் திமுக தரப்புடன் பாமகவினர் பேசி வந்தனர்.
இந்த நிலையில் பாமக, திமுக கூட்டணியில் இருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், நாங்கள் கூட்டணியில் சேருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சித் தலைவர்களிடம் ஆலோசித்த பின்னர்தான் முடிவெடுத்து அறிவிப்போம் என்றார் கருணாநிதி.
இந்த இடத்தில்தான் கருணாநிதி தனது சாணக்கியத்தனத்தை காட்டியுள்ளதாக கருதப்படுகிறது.
கூட்டணியில் பாமக இருப்பதாக, பாமகவுக்கேக் கூட முன்கூட்டியே தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக கருணாநிதி கூறியதற்கு பல காரணங்கள் கற்பிக்க்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் 50 சீட் வரை கேட்டது பாமக. மறுபக்கம் காங்கிரஸோ 80 சீட்களுக்கும் மேலாக வேண்டும் என்று கூறி வந்தது. இந்த நிலையில் இந்த சிக்கலைச் சமாளிக்கும் வகையிலேயே முதல்வர் கருணாநிதி, பாமக கூட்டணியில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.
இதில் திமுகவுக்கு என்ன லாபம் நிறைய இருக்கிறது.
பாமக கூட்டணியில் இருப்பதை சுட்டிக்காட்டியதன் மூலம், காங்கிரஸுக்கு தொகுதிகள் அதிகம் தர முடியாது என்று கூறிக் கொள்ள முடியும்.
2வது, காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் தர வேண்டியிருப்பதால் பாமக கேட்கும் அதிக தொகுதிகளைத் தர முடியாது என்று பாமகவிடமும் கூறிக் கொள்ள முடியும்.
தனது தன்னிச்சையான அறிவிப்பால் பாமக நிச்சயம் அதிருப்தி அடையும் என்பது கருணாநிதிக்கே தெரியும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எனவேதான் கருணாநிதி எதிர்பார்த்தபடியே பாமக, கருணாநிதியின் பேச்சை ஏற்கவில்லை. இதன் எதிர்பார்ப்பு என்னவென்றால் பாமகவால் நிச்சயம் எங்கும் போக முடியாது என்ற அதீத நம்பிக்கைதான்.
ஒரு வேளை பாமக, திமுக கூட்டணியில் சேராமல், அதிமுக பக்கம் போனாலும் கூட திமுகவுக்குத்தான் பெரிய லாபம். காரணம், அதிமுகவில் தேமுதிக சேரும் வாய்ப்பு இன்னும் மங்கவில்லை. ஒரு வேளை தேமுதிக அதிமுகவில் சேர்ந்து, பாமகவும் போய்ச் சேர்ந்தால் அங்கு தொகுதிப் பங்கீட்டில் மிகப் பெரிய சிக்கல் வரும்.
தேமுதிகவுக்கு கொடுக்கப்படும் தொகுதியில் ஒரு தொகுதியாவது கூட வேண்டும் என்று நிச்சயமாக பாமக கேட்கும். பாமகவை விட குறைத்து தொகுதிகளைக் கொடுத்தால் தேமுதிக ஏற்காது. தேமுதிகவா, பாமகவா என்று எடை போட்டுப் பார்த்தால் நிச்சயம் தேமுதிகவைத்தான் ஜெயலலிதா ஏற்பார். காரணம், அதிமுகவின் வாக்கு வங்கியை குதறிப் போட்டுக் கொண்டிருப்பது தேமுதிகதான். பாமக வந்தால் கூடுதல் பலம், அவ்வளவுதான். மற்றபடி தேமுதிகவை விட்டு விட்டு பாமகவை நிச்சயம் ஜெயலலிதா ஏற்க மாட்டார்.
ஒரு வேளை பாமகவை முக்கியத்துவம் கொடுத்து ஜெயலலிதா நடத்தினால் நிச்சயம் தேமுதிக, அதிமுக அணிக்குப் போகாது. அப்படிப் போகாமல் தனித்து போட்டியிட்டாலோ அல்லது குட்டிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு போட்டியிட்டாலோ அது திமுகவுக்குத்தான் மிகப் பெரிய லாபம்.
எனவே பாமகவுக்குப் போக்குக் காட்டி அதை எங்கும் போகாமல் தங்கள் பக்கத்திலேயே, அதிலும், தாங்கள் விரும்பிய அளவிலான தொகுதிகளை மட்டுமே கொடுத்து தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில்தான் கருணாநிதி இப்படி அதிரடியாக நடந்து கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
திமுகவின் இந்த வலை விரிப்பு பாமகவுக்கு இப்போதுதான் புரிந்துள்ளதாக தெரிகிறது. எனவேதான் மீண்டும் திமுகவின் பக்கம் சேர அது துடிக்க ஆரம்பித்துள்ளது. இதன் விளைவுதான் வீரபாண்டி ஆறுமுகத்தை முதலில் ஜி.கே.மணியும், இன்று டாக்டர் ராமதாஸும் சந்தித்துப் பேசியது. மேலும், பாமக திமுக கூட்டணியில் இல்லை என்றும் ராமதாஸ் வேகம் வேகமாக கூறியிருக்கிறார்.
இப்படியாக பாமகவை எங்கும் போக விடாமல் திமுக பக்கமே வர வேண்டிய நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளி விட்டார். அதேபோல, தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று பாமகவும் மிரட்ட முடியாத நிலையையும் ஏற்படுத்தி வைத்து விட்டார்.
கருணாநிதியின் அறிவிப்புக்கு இதுதான் காரணமாக இருக்க முடியும் என்கிறார்கள் திமுகவின் நாடித் துடிப்பை அறிந்தவர்கள்.

No comments:
Post a Comment