'தெய்வமகன்' பெயர் மாற்றம்?
நடிகர் அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஜய், ‘மதராசப்பட்டினம்’ படத்தைத் தந்ததின் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர் அந்தஸ்த்தை பெற்றார். இருவடைய அடுத்த படம் 'விக்ரம்' நடிக்கும் 'தெய்வமகன்'. தன் ஏழு வயது மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் கதையாக இது இருக்குமாம். மன நோயாளியாக நடிக்கும் விக்ரமுக்கு பக்க பலமாக இருக்கும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில அனுஷ்கா கலக்க இருக்கிறாராம். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக விஜய் தெரிவித்தார். மேலும் படத்துக்கு தெய்வமகன் என்ற பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும், ஒருவேளை பெயர் மாறலாம் என்றும் தெரிவித்தார்.
என் பாலிசி நோ ரீமிக்ஸ்
‘ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைக்க மாட்டேன்’ என்றார் சுந்தர்.சி பாபு. இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது ‘அகராதி’, ‘மார்க்கண்டேயன்’, ‘வேலூர் மாவட்டம்’ படங்களுக்கு இசையமைக்கிறேன். இதுவரை என் இசையில் நான் பாடியது இல்லை. காரணம், என் குரல் வளத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் பாடி ரசிகர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாடல்கள் உருவாகும்போது, டிராக் மட்டும் பாடுவேன். டாக்டர் அறிவுரைப்படி உடற்பயிற்சி செய்கிறேன். இதை வைத்து, ஹீரோவாக நடிக்க தயாராகி வருவதாக சிலர் சொல்கின்றனர். அது உண்மை இல்லை. ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைக்க கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கிறேன். நான் இசையமைக்கும் பாடலே சிறப்பாக இருக்கும்போது, இன்னொருவர் இசையில் உருவான பாடலை நான் ஏன் ரீமிக்ஸ் செய்ய வேண்டும்?
No comments:
Post a Comment