ஆற அமர படம் எடுப்பது கூட சரிதான். அதற்காக ஆறி ஜில்லென்று ஆகிற வரைக்கும் காத்திருப்பதுதான் ஏன் என்று புரியவில்லை. ஆணானப்பட்ட கவுதம் மேனனுக்கே இப்படி ஒரு சிக்கல்! சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை இவர் துவங்கினார். அதன்பின் ஏழெட்டு மழைக்காலங்கள் அசால்ட்டாக ஓடிவிட்டன. இன்னமும் படம் பிள்ளையார் சுழி லெவலிலேயேதான் இருக்கிறது.
முதலில் இப்படத்தில் நடிக்க கவுதம் மேனன் அழைத்தது அசினைதான். அவர் அந்த நேரத்தில் பிஸியாக இருந்ததால் அந்த இடத்திற்கு வந்தார் த்ரிஷா. இவரை வைத்து சில காட்சிகளையும் படம் பிடித்தார் கவுதம். அப்புறம் படத்தை அப்படியே போட்டுவிட்டு வேறு வேறு படங்களை எடுத்துக் கொண்டிருந்தவர் அவ்வப்போது இந்த ஸ்கிரிப்டையும் எடுத்து தூசி தட்டி வைத்துவிடுவார்.
இந்த முறை சீரியஸ் ஆகவே படத்தை முடித்துவிட நினைத்தாராம். காவலன் படத்திற்கு பின்பு தமிழ் படங்கள் மீதே வெறுப்பில் இருக்கும் அசினிடம், மறுபடியும் கால்ஷீட் கேட்டு தூது அனுப்பியிருக்கிறார். நான் இப்போ இந்தியில் பிஸி. "ஸாரி... என்னால முடியாது" என்றாராம் அசின். (நல்ல கதைகள் கிடைத்தால் தமிழில் நடிப்பேன் என்று பேட்டி கொடுப்பதெல்லாம் ச்சும்மா போலிருக்கு)
சரி... கவுதம் என்ன செய்யப் போகிறார்? நல்ல அழகான முகவெட்டுள்ள நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்!
No comments:
Post a Comment