உலக நாடுகள் பலவற்றின் ரகசியங்களை அம்பலபடுத்திய விக்கி லீக்க்சின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நார்வே நாட்டின் 24 வயது பாராளுமன்ற உறுப்பினர் ஷ்னார் வேலன் என்பவர்தான் அசாஞ்சேயின் பெயரை சிபாரிசு செய்துள்ளவர். அசாஞ்சேயின் இந்தசெயல் கருத்து சுதந்திரம், தகவலறியும் உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்ட பயன்பட்டதாக வேலன் தனது இணைய தளத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனிஷியா நாட்டின் 24 ஆண்டு கால சர்வாதிகார அரசை முடிவுக்குக்கொண்டுவந்ததில் பெரும் பங்கு விக்கி லீக்சுக்கு உண்டு என அவர் மேலும் கூறியுள்ளார்.
இருப்பினும், நோபல் பரிசு குழு இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பாமல் இருந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் பாலியல் புகாருக்கு ஆளாகி, பிரிட்டனில் கைது செய்யப்பட்டவர் என்பதனாலும் அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடியவர் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானவர் என்பதனாலும் பரிசு குழு இது விஷயத்தில் அமைதிகாத்து வருகிறது.
No comments:
Post a Comment