பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் கந்தனை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசத் தொடங்கியவுடன் மேடையின் முன், ஒரு முட்டை வந்து விழுந்தது. முட்டை வீசியவர்களை போலீசார் தேடினர்; அவர் ஓடிவிட்டார்.
பின், இல.கணேசன் பேசும்போது, ‘’காங்கிரசில் குடும்ப ஆட்சி மேலோங்கி விட்டது. இந்திய அரசு எடுக்கும் முடிவுகள், தீர்மானங்கள் ஒரு குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளன.
காங்கிரசை எதிர்பார்த்து காத்திருந்த தே.மு.தி.க., கடைசியில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. ஏப்ரல் 13க்குப் பின், விஜயகாந்த் சினிமாவில் நடிக்க சென்று விடுவார். அங்கும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. சினிமா மோகத்தை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.
எம்.ஜி.ஆர்., இதற்கு விதிவிலக்கானவர்; நல்ல நடிகர்களை மதிக்கிறோம். அரசியலுக்கு வந்தால் அவர்களை அகற்ற வேண்டும். தேர்தலுக்குப் பின் இழுபறி நிலை ஏற்பட்டால், காங்கிரஸ் தே.மு.தி.க., கூட்டணி அமைக்கும்’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment