வெற்றி பெற்றாலும், தோற்றாலும் திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
அரக்கோணம் தொகுதி விடுதலைச் சிறுதிதைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,
சாதாரண, சாமான்ய மக்களுக்கான திட்டங்களை தீட்டியவர் முதல்வர் கருணாநிதி மட்டுமே. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சத்துணவு மட்டுமே போடப்பட்டது. ஆனால், அத்திட்டத்தில் முட்டை கொடுத்து அதை உண்மையான சத்துணவாக மாற்றியவர் கலைஞர்.
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் கொண்டு வந்தது, சைக்கிள் ரிக்ஷாவை ஒழித்ததும், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நிலையை ஒழிக்க உறுதி ஏற்றுள்ளதும் திமுக அரசு மட்டுமே.
விடுதலைச் சிறுத்தைக் கட்சி சட்டப்பேரவையில் விடுத்த கோரிக்கையையேற்று, அரவானிகள், நரிக்குறவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் என அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு வாரியம் அமைத்தவர் கலைஞர்.
அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம், வியாசர்பாடியில் கலைக்கல்லூரி அமைத்தவர் கலைஞர். 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதிமுக கைவிட்ட நிலையில் திமுகதான் அரவணைத்தது.
இப்போதைய தேர்தலில் கூட்டணிக்காக அதிமுகவிலிருந்து தூது வந்தது. நான் நன்றி உணர்வு மிக்கவன். கசப்பான அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு. தோற்றாலும், வென்றாலும் இனி எங்கள் கூட்டணி திமுகவுடன்தான் என்றார்.
No comments:
Post a Comment