ஆச்சர்யப்படுவீர்களோ, இதென்ன கெரகம் என்று கோபப்படுவீர்களோ, சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறோம். தெய்வ திருமகன் படத்தில் விக்ரம் 18 வயசு பையனாக நடிக்கிறாராம். இதற்காக அவர் பல மடங்கு உடல் இளைத்தார் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார்.
படமே முடிந்துவிட்டது. இனிமேலும் இந்த தகவலை பொத்தி பொத்தி வைத்திருந்தால் பெப் இருக்காது என்று நினைத்திருக்கலாம். லேசாக செய்தியை கசிய விடுகிறார்கள் டைரக்டர் விஜய் தரப்பிலிருந்து.
ஆதவன் படத்திலும் சூர்யா இப்படிதான் ஸ்கூல் பையனாக நடிக்கிறார் என்று பெரும் ஆச்சர்யத்தை கிளப்பினார்கள். அப்புறம் படம் வந்தபின் அந்த சூட்சுமத்தை அறிந்து வாட்டமடைந்தது ரசிகர்கள் முகம். விக்ரம் அந்தளவுக்கு ஏமாற்ற மாட்டார் என்று நம்பலாம். ஏனென்றால்...?
அட விடுங்க. என்னவோ ஒரு நம்பிக்கை!
அப்படியே இன்னொரு தகவல். கவுதம் மேனனும் விக்ரமும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இது அடுத்த படத்திற்கான சந்திப்பாக இருக்கலாமாம்.
No comments:
Post a Comment