திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஜி.எச்.சேகரை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி பஜாரில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், ’’தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது மரங்களை வெட்டிப்போட்டார்கள். 20 ஆண்டுகள் கழித்து பசுமை தாயகம் என்று சொல்கிறார்கள். நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்.
இருக்கிற அரசியல்வாதிகளில் நான் யோக்கியமானவன்தான். போன தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்றும், இந்த தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்றும் தி.மு.க.வினர் கூறுகின்றனர். அதை ஒத்துக்கொள்கிறேன்.
அப்படி என்றால் என்றும் மக்களின் வில்லன் தி.மு.க.வினராகிய நீங்கள்தான். தி.மு.க. மட்டும் பொதுமக்களுக்கு நல்லது செய்திருந்தால் இத்தனை கட்சிகள் இங்கு தோன்றியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.
பெரியபாளையம் மேம்பாலம் அருகே தேர்தல் அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், ‘’கோடிகளை வாங்கிக்கொண்டு விஜயகாந்த் கூட்டணி வைத்துக்கொண்டார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நான் கோடிகளுக்காக கூட்டணி வைக்கவில்லை. மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகதான் கூட்டணி வைத்தேன்.
மின்வெட்டு இல்லா தமிழகம் வேண்டும், விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றுதான் கூட்டணி வைத்தேன். அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்கவேண்டும்’’ என்று பேசினார்.
ஊத்துக்கோட்டையில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், ‘’தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்பதால் சிந்தித்து ஓட்டு போடுங்கள். அ.தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி. தி.மு.க. கூட்டணி கொள்கையில்லா கூட்டணி.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஊழல் பெருகி விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. இவற்றை கருத்தில் கொண்டு ஓட்டு போடுங்கள்’’ என்று பேசினார்.
திருவாலங்காடு ஒன்றியம் நாராயணபுரம் கூட்டுச்சாலையில் திருவள்ளூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.ரமணா, பூந்தமல்லி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் ஆகியோரை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் "தமிழ்நாட்டில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுதான் இருக்கும். ஆகவே அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
அதன் பின்னர் திருத்தணியில் வேட்பாளர் அருண்சுப்பிரமணியத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், ’’தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்னும் கடுமையாக சோதனைகள் நடத்த வேண்டும். அப்போது தான் தி.மு.கவினரிடம் இருக்கும் கறுப்பு பணம் பிடிபடும். காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்கு ஜால்ரா அடிக்கிறது. தற்போது கருணாநிதி நடிகர்களை மிரட்டி பிரசாரத்திற்காக குத்தகைக்கு எடுத்துள்ளார்.
நான் ஏன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தேன் என்று கேட்கிறார்கள். எனது மானசீக குருநாதர் எம்.ஜி.ஆர். அதனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து கருணாநிதியை எதிர்த்து போராடுகிறேன்.
வரவிருக்கும் தேர்தலில் திருத்தணி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டி கொள்கிறேன்’’ என்று பேசினார்.
இன்றைய பதிவுகள்...
- விஜயகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் பாய்ச்சல்
- மனம் மாறினார் திவ்யா
- நாசர் ரசித்து நடித்த படம்
- கண்டேன் படத்திற்கு யு சான்று: ஏப்ரலில் ரிலீஸ்
- பாமக தொகுதியில் குஷ்பு பிரசாரம் செய்தால் ராமதாஸ் ஒ...
- கலைஞர் போட்டியிடும் தொகுதியில் ஜெ. பிரச்சாரம்
- சும்மா கிசுகிசு பரப்பாதீங்க, உலகக் கோப்பை ஆட்டம் ப...
- புரட்சியோடு புரட்சி இணைந்துள்ள மெகா வெற்றிக் கூட்ட...
- வடிவேலுவை தொடர்ந்து விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்...
- தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்
- ஏன் வரவில்லை சாந்தி? வாலிப வயோதிக அன்பர்கள் அதிர்...
- வானம் சூட்டிங்கில் சிம்புவுக்கு மீண்டும் காயம்
- ஆவேச வடிவேலு.... அடடே பின்னணி!
- உண்மையான தகவல்களை மறைத்ததாக ;மனைவி ஜெயந்தி மனு தள்...
- வைகோ முடிவு துரதிர்ஷ்டவசமானது: இல.கணேசன்
- ரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்! - ரஜினியின் அரச...
- எந்நேரமும் கைது செய்யப்படலாம் வடிவேலு :தமிழக அரசிய...
- சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: சீம...
- ஜெயலலிதாவால் வாக்கு கேட்க முடியவில்லை: ஸ்டாலின்
- கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் ...
- போயஸ்கார்டன் வீட்டை தானமாக வழங்குவாரா ஜெயலலிதா? ...
- அதிமுகவின் சிப்பாயாக மாறிவிட்டார் விஜயகாந்த் : மத...
- அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் விஜயகாந்த்: ராமதாஸ...
- போன தேர்தல் அறிக்கை கதாநாயகன், இந்த தேர்தல் அறிக்க...
- ஜெயலலிதாவுக்கு நன்மை செய்யும் மனசு வராது: குஷ்பு
- நீ ஆம்பளயா இருந்தா... - விஜயகாந்தை விளாசும் வடிவ...
No comments:
Post a Comment