‘ரெடி’ இந்தி படத்துக்காக பாங்காக்கில் இருந்தபோது கேரளாவில் இருப்பதை போன்றே உணர்ந்தேன் என்றார் அசின். இதுபற்றி அவர் கூறும்போது, ‘கேரளா எப்போதும் பசுமையாக இருக்கும். பாங்காக்கில் நாங்கள் ஷூட்டிங் நடத்திய இடமும் அப்படியே இருந்தது. அது வேறு நாடு என்கிற எண்ணம் எனக்கு வரவில்லை. கேரளாவில் இருப்பதை போன்றே உணர்ந்தேன். இந்தப் படத்துக்காகத்தான் அதிக நாட்கள் வெளிநாடுகளில் செலவழிக்க வேண்டியதாக இருந்தது’ என்றார்.
ஆதிபகவனில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி
அமீர் இயக்கும் ‘ஆதிபகவன்’ படத்தில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். தமிழில், ‘புதையல்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’, ‘வேதம்‘, ‘மானஸ்தன்’ உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இந்தி நடிகை சாக்ஷி. கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்த இவர், திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்தார். இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் ‘ஆதிபகவன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இதன் ஷூட்டிங் பின்னிமில்லில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த பாடலுக்காக, வெளிநாட்டில் இருந்து 150 டான்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நல்ல படங்களுக்காக விட்டுக் கொடுக்கலாம்
‘சிங்கம் புலி’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் சவுந்தர்யா. இவர் நடித்த பல காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சவுந்தர்யா கூறியதாவது: நான் நடித்த சில காட்சிகள் படத்தில் இல்லை. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறேன். நல்ல படங்களில் நடிக்கும்போது இதுபோன்ற விட்டுக் கொடுத்தல் சகஜம்தான். இப்போது தமிழில் ‘காந்தர்வன்’, ‘மல்லுக்கட்டு’ படத்தில் நடித்து வருகிறேன். ஒன்றில் கிராமத்து பெண், மற்றொன்றில் நகர்புறத்து கல்லூரி மாணவி. தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க நீண்ட நாள் போராடும் நடிகைகளில் நானும் ஒருத்தி. அதனால் படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன்.
ஷாமின் 6
‘முகவரி’, ‘காதல் சடுகுடு’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ படங்களை இயக்கிய வி.இசட். துரை, அடுத்து இயக்கும் படத்துக்கு ‘6’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தில் ஷாம் ஹீரோ. அவர் 3 வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயின் உட்பட மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.
No comments:
Post a Comment