குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது,
பாமகவினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கிவிட்டனர். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.
இதேபோன்று மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என அன்று வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது.
திமுக ஆட்சியில் விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த தேர்தலில் திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சியான பாமகவையும் பொது மக்கள் விரட்டியடிப்பார்கள் என்றார்.

No comments:
Post a Comment