திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் குடவாசல் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
திருவாரூர் வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரன், மன்னார்குடி வேட்பாளர் ராஜமாணிக்கம், நன்னிநலம் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து ஜெயலலிதா, திருவாரூர் தெற்கு வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், ‘’அ.தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சதி திட்டங்களில் ஈடுபட இருப்பதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கபட நாடகம் ஆடி அதன் மூலம் அனுதாப ஓட்டுகளை பெற்று விடலாம் என்று வியூகம் வகுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கருணாநிதியின் கபட நாடகத்தில் ஏமாந்து விடாமல் மக்கள் அ.தி.மு.க., வுக்கு ஓட்டளிக்க வேண்டும்’’என்று கூறினார்.
No comments:
Post a Comment