முதல்வர் கருணாநிதி பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டியில், ‘’சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தேவை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘’கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கு எனது பெயர் மட்டுமே சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அதில் எனக்கு எந்தவித உரிமையும் கிடையாது.
எனது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத் குமார் ஆகியோருக்கு தான் அதில் பங்குகள் உள்ளன.
சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சி கடன் பெற்றது. இதை எப்படி ஊழலாக கூறமுடியும்? சில அரசியல்வாதிகள் 2ஜி விவகாரத்தை மிகவும் பெரிதுபடுத்தி கூறி வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment