தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் விஜயகாந்த் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது என வடிவேலு கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,
விஜயகாந்த் எப்போதும் நிதானமின்றி இருப்பதால், பிரச்சாரத்தில் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது. ஏதோ ஒரு பிரச்சனையை பற்றி எப்போதாவது நிதானமாக அவரால் பேச முடிகிறதா. அவருக்கு பெயர் கேப்டன் என்று சொல்கிறார்கள். தான் என்ன பேசினோம் என்பதை காலையில் பேப்பரில் பார்த்துதான் தெரிந்துகொள்வார்.
எம்ஜிஆருக்கு மாற்றாக விஜயகாந்த்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நேற்று கட்சிûயை ஆரம்பித்துவிட்டு இன்று முதல் அமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படலாமா? முதல் அமைச்சராக வர ஆசையாக இருந்தால் ஒரு 5 கோடி, 10 கோடி செலவு செய்து முதல் அமைச்சராக நடிக்க வேண்டியதுதானே.
எம்ஜிஆர் போல நடிக்கணும் என்றால் அவரைப்போல ஒரு கண்ணாடியும், தொப்பியையும் போட்டு படத்துல நடக்க வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ரோட்ல வந்து எம்ஜிஆர் மாதிரியே தொப்பியை வாங்கி மாட்டிக்கிட்டு, கண்ணாடிய மாட்டிக்கிட்டு, கையில கர்ச்சிப்பை வைச்சிக்கிட்டு அசிங்கமா இல்லையா.
இப்படி பேசியதால் என்னுடைய உருவபொம்யை எரிக்கச் சொல்லி மகிழ்கிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு எதிரான எனது விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்றார்.
No comments:
Post a Comment