ராமநாதபுரத்தில் ரகளையில் ஈடுபட்ட திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் கைது செய்யப்பட்டார். அவரும், அவரது ஆதரவாளர்களும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருவாடானை தொகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பிச்சங்குறிச்சியில் பிரசாரம் செய்ய வந்த அமைச்சர் தங்கவேலனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், பிரசாரம் செய்ய முடியாமல் அமைச்சர் தங்கவேலன் திரும்பி சென்றதால் ஆத்திரமுற்ற திமுக,எம்.பி. ஜே.கே. ரித்தீஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் , சோழந்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, தலித் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக ரித்தீஷ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ரித்திஷை கைது செய்யக் கோரி ராமநாதபுரத்தில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ் மற்றும் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர், மதுரை மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment