தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் வேலுமணியை ஆதரித்து சிரிப்பு நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை அருகே, பிரசாரத்தை துவக்கி பேசியபோது,"குடும்ப ஆட்சியான தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப, ஜெயலலிதா மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளார். இக்கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குடும்ப ஆட்சி நீடித்தால், தமிழகத்தில் ஜனநாயகம் இல்லாமல்போய், மீண்டும் மன்னராட்சி வந்து விடும். இந்த முறை ஏமாறாமல் மக்கள் ஓட்டளிக்க வேண்டும். "கரன்ட் கட்' செய்த தி.மு.க., வை நீங்கள் "கட்' செய்ய வேண்டும். ஊழல் பணத்தை லஞ்சமாக கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு, அ.தி.மு.க.,வுக்கு வாக்களியுங்கள்'என்றார். தொடர்ந்து, ஆலாந்துறை, பேரூர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
No comments:
Post a Comment