இளகிய மனசு, தாராள குணம் கொண்டவர்தான் எனக்கு கணவராக வர வேண்டும் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். தமிழ் சினிமாக்களை தவிர்த்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் கரை ஒதுங்கியிருக்கும் தங்க மங்கை தமன்னா, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் திருமணம் பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த தமன்னா, இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டமெல்லாம் இல்லை. நான் சின்னப் பொண்ணு. 21 வயசுதான் ஆகிறது. ஆனால் எனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்கணும் என்று ஒரு கனவு இருக்கிறது. அவர் இளகிய மனம் படைத்தவராக இருக்க வேண்டும். தாராள குணம் கொண்டவராக இருக்கணும். என் ஆசைகளை, விருப்பங்களைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் அப்பாவியாக இருந்தேன். இப்போது நிறைய படங்களில் நடித்து முடித்து சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு கசப்பான அனுபவங்கள் உண்டு. ஏண்டா சினிமாவுக்கு வந்தோம் திரையுலகை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு விரக்தியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், கடினமாக உழைத்தால் எதையும் பெற முடியும். நடிகையான பிறகு இயக்குனர் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒவ்வொரு படத்தையும் புதிதாக செய்வது போல் உணர்கிறேன். எனக்கு இரவு நேரப் பார்ட்டிகள் அறவே பிடிக்காது. தமிழில் இயக்குனர்கள் கவுதம், ராதாமோகன், சசிகுமார் படங்களில் நடிக்க ஆசை. நவீன உடைகளைவிட, புடவைதான் எனக்குப் பிடித்த உடை. இந்தியப் பெண்களுக்கு அதுதான் அழகு, என்று கூறினார்.
இன்றைய பதிவுகள்...
- ஜெயலலிதாவின் தண்டனை காலம் முடிந்துவுட்டது: நடிகை ...
- மொஹாலி போட்டி:நெஞ்சுவலியால் உயிரிழந்த நடிகர்
- விஜயகாந்த்தை அவரது கூட்டணியே நம்பவில்லை: திருமா
- சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு
- ஆர்யாவிடம் துக்கம் விசாரிக்கும் ரசிகர்கள்
- முட்டையால் அடித்தவர்களுக்கு வாக்குசேகரிப்பா? குஷ்...
- வரும்... ஆனால் வராது - வடிவேலு
- ரிஷிவந்தியம் காங்கிரஸ் வேட்பாளர் மீது சென்னை பெண் ...
- ஜெ. - நடிகர் சிங்கமுத்து சந்திப்பு : வடிவேலுவுக்க...
- ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்...
- அதிமுக கொடிகளை அகற்ற சொன்ன விஜயகாந்த்துக்கு கடும் ...
- வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்...
- விஜயகாந்துடன் போகும் வேட்பாளர்கள் ஹெல்மெட் போட்டுக...
- தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வாக்குகள் இல்லாத நிலைய...
- தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறாது: ராமதாஸ்...
- விஜயகாந்த் வண்டவாளம் எனக்கு தெரியும்: நெப்போலியன்
- விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் 10 வேட்பாளர்கள்...
- கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்...
- ஜெயலலிதாவுடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; ஜெ. சந...
- சட்டப்படி குற்றம் :திரை விமர்சனம் :
- மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன்: ஸ்டாலின்
- மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து
- தலைவர் ஆவாரா தல?
- விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்
- விஜயகாந்த்தை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்க ...
- காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு
No comments:
Post a Comment