சினிமாவில் புதுப்புது தொழில்நுட்பத்தை புகுத்துவதில் முன்னோடியாகத் திகழ்பவர் கமல்ஹாஸன்.
தொழில் நுட்ப மாற்றம் வரவரத்தான் சினிமா உயிர்ப்புடன் திகழும் என்பதை அடிக்கடி வலியுறுத்துவது அவர் வழக்கம். அந்த வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வருபவர் கமல்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல்ஹாஸன், "இந்திய சினிமா இப்போது 15 பில்லியன் டாலர் வர்த்தகம் கொண்டதாக உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறினால் அது 120 பில்லியன் டாலராக உயர வாய்ப்பிருக்கிறது.
சினிமா தொழில்நுட்பத்தின் எதிர்காலமே டிஜிட்டல்தான். இது சிக்கனம் மட்டுமல்ல, சினிமா பார்க்கும் அனுபவத்தை உயர்த்தும் யுத்தியும் கூட. கேமராமேன் படமாக்கித் தரும் அதே தரத்தை கடைசி நிலை ரசிகனும் அனுபவிக்க, சினிமாவை டிஜிட்டலுக்கு மாற்றுவது ஒன்றுதான் ஒரே வழி!", என்றார்.

No comments:
Post a Comment