உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்துவந்த நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு சுமார் 30 நிமிடங்கள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, உடல் நலம் கருதி 2 நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ராணா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. அப்போது உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் ரஜினிகாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்ற பின் அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில், புதன்கிழமை பரிசோதனைக்காகச் சென்றபோதும் அவர் சிறிது சோர்வுடனேயே காணப்பட்டார்.
அவரது வீட்டில் பார்வையாளர்கள் தொடர்ச்சியாக வருவதால், அவரால் பூரண ஓய்வு எடுக்க முடியவில்லை. எனவே, மருத்துவமனையில் 2 நாள்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment