மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மேலும் 2 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக, ஏப்ரல் 29ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்று மாலையே வீடு திரும்பினார்.
பின்னர், மே 4ம் தேதி இரவு, அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் மருத்துவமனையில் மேலும் இருநாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போது அவர் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:
Post a Comment