வரம் கொடுத்த சாமியாகதான் கொண்டாடணும் டைரக்டர் பிரபு சாலமனை. ஆனால் அப்படியெல்லாம் கொண்டாட வேண்டிய அமலா பால் தன் செய்கையால் நிறம் வெளுத்து போய்விட்டார் என்பதுதான் கொடுமை.
மைனாவுக்கு முன்பு வரை அமலா பால் என்றொரு நடிகையை ஜுனியர் ஆர்ட்டிஸ்டுக்கும் சற்று மேல் நிலையில் வைத்துதான் பார்த்தது தமிழ்சினிமா. அப்பபடத்தின் வெற்றிக்கு பிறகு அவரது கலரிலும் கரன்ஸிகளிலும் கூட அநியாய து£க்கல்.
இந்த நிலையில்தான் இப்பபடத்தை இந்தியிலும் எடுக்க திட்டமிட்டார் பிரபுசாலமன். அதற்கான முதல் அடி எடுத்து வைத்ததுமே அவர் கேட்டது அமலாவின் கால்ஷீட்டைதான். இந்திக்கு போகிற ஆசை யாருக்குதான் இருக்காது? லட்சம் கோடியாகுமே என்ற ஆசை இருந்தது அமலாவுக்கு. நீங்க கேட்டா எப்ப வேணாலும் கால்ஷீட் கொடுக்க தயார். ஆனால் மைனா நேரத்தில் எனக்கு கொடுத்த மாதிரிதான் பேமெண்ட் தருவீங்கன்னா நான் இப்படத்தில் நடிக்கறது பற்றி யோசிக்கணும் என்றாராம் அமலா.
மைனா வெற்றிக்குப்பின் சிரிச்சு பேசினாலே இமேஜ் கெட்டுப் போய்விடும் என்று ஒரு மார்கமாக நடந்து கொள்கிறார் பிரபு சாலமன். இந்த நேரத்தில் இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டால் அவரது ஈகோ சும்மாயிருக்குமா? போயிட்டு வாம்மா என்று கூறிவிட்டாராம்.
மும்பையில் தங்கி புதுமுகம் தேடிக் கொண்டிருக்கிறாராம். மைனா பட வெற்றி டைரக்டர் என்றதும் சுமார் ஐநு£றுக்கும் மேற்பட்ட கிளிகள் க்யூவில் நிற்கிறார்களாம். அதில் ஒரு அமலா கிடைக்காமலா போய்விடுவார்?

No comments:
Post a Comment