விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, May 1, 2011

    அஜீத் 40 - பிறந்த நாள் ஸ்பெஷல்


    தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து  நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் இன்று  தனது 40 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய 40 துளிகள் இங்கே...

    1. தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு ( வருஷம் ) அறிமுகம் ஆனார்.

    2. தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.

    3. தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.

    4. அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.

    5. 1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

    6. அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.

    7. தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண்.  அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.

    8. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜீத்.

    9. அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

    10. வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.!   ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.

    11. மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.


    12. இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.

    13. கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும்  பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.

    14. சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான்.  அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.

    15. பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.

    16. 'நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.

    17. அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

    18. சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை  நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

    19. தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்து வருகிறார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் வில்லனாக மட்டுமே நடித்து வருகிறார்.

    20. சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக  உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.

    21. அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"

    22. தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!

    23. வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக் காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!
    .
    24. சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!

    25. வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!

    26. உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!

    27. சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!

    28. ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

    29. ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார்.  'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!


    30. தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!

    31. 'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

    32. பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!

    33. அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!

    34. உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!

    35. எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!

    36. படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!

    37. மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!

    38. அனோஷ்கா, தந்தையை 'அஜீத் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!

    49. மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!

    40. தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!


    Posted by விழியே பேசு... at 7:52 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ▼  May (668)
      • காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்
      • ஹன்சிகா புது முடிவு!
      • தெய்வ திருமகன் - புத்தம் புதிய டிரெய்லர்
      • ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி : சிறுநீரகத்தை தானமாக...
      • ராம்சரண் தேஜாவுக்கு மாமியாரா...? மீனா மறுப்பு!
      • முதன் முதலாக விக்ரம்!
      • அஜீத்தின் மங்காத்தா ரிலீஸ் தியதி !
      • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : தயாநிதி மாறன் மீது பாரத...
      • நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!
      • வைரமுத்து தூக்கி நிறுத்தும் 'சேவற்கொடி'
      • இசைப்ரியா எப்படி கற்பழிக்கப்பட்டாள் : வைகோ வெளியிட...
      • போர்க்குற்றத்தை நிரூபிக்க இறுதிக்கட்ட போர் வீடியோ ...
      • செலவு மேல் செலவு திணறும் சிம்பு படம்!
      • அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கடலில் கோட்டை கட்டுவ...
      • அமைச்சர் மரியம்பிச்சை மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசா...
      • வடிவேலுவை சீண்டிய விவேக்
      • இன்று விஜய் கொண்டாடிய பிறந்தநாள் விழா!
      • மருத்துவமனையில் ரஜினி முணுமுணுப்பு :'நான் ஒண்ணுமே ...
      • ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...
      • செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற...
      • தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக தமிழக அரசு 680 கிலோ...
      • கனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு
      • ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி மு...
      • கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த எஸ்.எம்.எஸ்.
      • பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்..சொன்னதை செய்...
      • முன்னாள் கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம்-வனிதா கைத...
      • சினிமாவால் பாதிப்பு! முன்னாள் முதல்வர் வேதனை!!
      • தி.மு.க.,வுக்கு மாற்றாக ஏற்பாடுகள்: எதற்கும் எப்போ...
      • பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்
      • அரசு பணத்தில் ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டேன்: வி...
      • மம்முட்டிக்கு ஜோடியான மிஸ் இந்திய அழகி!
      • கமலின் விஸ்வரூபத்தில் ஸ்ரேயா...?
      • விக்ரமிற்கு டாக்டர் பட்டம்: போட்டோக்கள்
      • பிஸியான அனுயா!
      • மரியம்பிச்சை மரணம்: விபத்துக்கு காரணமான லாரி பிடிப...
      • சீமானின் பகலவன் படத்தில் விஜயின் ஜோடி ?
      • சூர்யா காலில் விழும் விஷால் ஆர்யா? -ரசிகர்களுக்கு...
      • ஜெயலலிதாவின் புதிய முடிவால் அதிர்ச்சியில் விஜய்
      • டெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவை...
      • மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிக...
      • 'காங். சரிவுக்கு இந்திரா காந்தியே காரணம்'
      • ஆஸ்கார் விருதை ஏ.ஆர்.ரகுமான் நான் பணம் கொடுத்து வா...
      • ரஜினிக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை;...
      • அம்மா புகழ் பாடும் விஜய் :"அம்மா ஆட்சி அமைய அணிலாக...
      • அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி
      • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினியின் தற்போதைய உட...
      • ஹீரோவாகிறார் நமீதா!
      • ஆடுகளத்துக்கு 6 விருதுகள் நியாயமா...? -வெற்றிமாறன்...
      • அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை
      • திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி
      • முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்
      • ஒரு கோடி சம்பளம்... சந்தர்ப்பவாதியான நடிகை!
      • அவன் இவன் - வேங்கை இரண்டையும் கைவிட்ட சன்!
      • ஜெயலலிதாவை ஈழத்திற்கு வரவழைக்க இலங்கை திட்டம்?
      • தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன்: வெற்றிமாறன்
      • அதிமுக அரசின் சா(சோ)தனைகள் : மதிமுகவினர் ஒட்டிய போ...
      • மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்ன...
      • அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் க...
      • விஜய் அப்பாக்கு கோர்ட் தடை!
      • நான் விலைமாதா தான் ஆவேன்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!
      • முதல்ல விக்ரம்; அப்புறம் சிம்பு: தீக்ஷாவுக்கு அடுத...
      • பியாவுடன் விஜய் காதல்?
      • நாற்பதை தொட்ட த்ரிஷா...!
      • எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருக்கிற அரசியல் சக்தி ரஜி...
      • கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
      • ஹஸன் அலியுடன் நெருக்கமாக இருந்த ஜெயப்ரதா, அமர்சிங்!
      • ஜெ.வை கொல்ல சதியா? -மனம் திறக்கும் புலிகள்!
      • ஜெ. உத்தரவு-செருப்பு போட ஆரம்பித்தார் அமைச்சர் உதய...
      • சோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற...
      • கமிஷனர் அலுவலகத்தில் உண்ணாவிரதமிருக்க வனிதா முயற்சி!
      • ரசிகர்களுக்காக ரஜினி பேசிய உருக்கமான பேச்சு - ஆடிய...
      • ரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா?-டாக்டர...
      • சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரஜினியைக் காண குவிந்...
      • தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நில...
      • என் ரஜினியைப் பார்க்க முடியாதா? -துடித்த கமல்! .. ...
      • ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... ; பரபரப்...
      • பாக்கணும் போல இருக்கு!
      • உரசிய ரசிகர்கள்! உர்ர்ரான அனுஷ்கா!!
      • மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கு ஜிக்கா பாடல்
      • ரஜினி சிங்கப்பூர் செல்வது ஏன்?
      • தயாரிப்பாளருக்கு தெரியாமல் படத்தை விற்ற ஹீரோ!
      • ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறார் ரஜினி : முகம...
      • அநாகரிகத்தில் 6 படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்க...
      • ரஜினிகாந்த் முகம்காட்டுவாரா? : மீடியாக்கள் பரபரப்பு
      • போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் : பத்திரிகைகாரர்கள் கு...
      • சல்மான்கானை முத்தமிட்டேனா? -அசின்
      • பெங்களூர் மைதானத்தில் ஆபாசமாக முத்தமிட்டார்: தீபிக...
      • எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-...
      • புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்
      • சட்டசபை தேமுதிக குழுத் தலைவராக விஜயகாந்த் அறிவிப்பு
      • 5 மாணவிகள் முதல் இடம்; 11 பேர் 2-ம் இடம், 24 பேர் ...
      • ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை?
      • சன் டிவி நிறுவனத்தின் லாபம் ....?!
      • கையில இலவச டிவி 'டோக்கன்'- வாயில 'அல்வா'?
      • 'ஸ்விட்ச் ஆப்' ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி!
      • தாவூத் 'காதலி' இலியானா?!
      • ஹிட்லரின் 'பேசும் நாய்கள்'!
      • 2011-2012ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவ...
      • 29 இடங்களில் வெற்றி: தே.மு.தி.க.வுக்கு அரசியல் கட்...
      • பகலில் கொலை-இரவில் எரிப்பு-வலம் வரும் திகில் கும்பல்!
      • சரணடைந்த புலிகள் கொலை: கோதபயசவுக்கு எதிராக பொன்சேக...
      • ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்: டயாலிஸிஸை நிறுத்த ...
      • 'காங்கிரஸை வீழ்த்திய சீமான்': பினாங் துணை முதல்வர்...
      • புலிகள் அரசியல் தலைவர் தமிழ் செல்வன் மனைவி விடுதலை
      • சென்னை அணியின் முக்கிய வீரராக நடிகர் சூர்யா
      • தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கு...
      • அப்பா விதித்த தடையை மீறினார் பூஜா!
      • தள்ளிப்போன எத்தன்
      • மீண்டும் விஜயுடன் இணையும் ஆர்யா
      • மூன்றாவது ஷெட்யூல் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'!
      • ரீமேக் படத்தை தமிழில் இயக்கும் பிரகாஷ் ராஜ்!
      • ஜூனியர் என்.டி.ஆருடன் லிப்-லாக்கா...? தமன்னா மறுப்பு
      • நடிகையிடம் சில்மிஷம் : ஜோசப் மீதான வழக்கை மீண்டும...
      • மலையாளத்தில் படுதோல்வியைத் தழுவிய படம் தமிழில்
      • கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகி...
      • ரஜினி நலம் பெற பண்ணாரி அம்மன் கோயிலில் தங்கத் தேர்...
      • அர்ஜுன் நடிப்பில் மூன்று மொழிகளில் 'காட்டுப்புலி'!
      • நீச்சலுடைக்கு 'நோ' சொல்லும் காஜல் அகர்வால்!
      • மறுபடியும் மேகா நாயர்!
      • சென்னை பெண் கொலை: துணை நடிகையின் கணவர்- கூலி படையி...
      • டெல்லி குண்டு வெடிப்பு: மும்பையில் பாதுகாப்பு உஷார...
      • அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்ட...
      • சிறைக்குள் கணவர்கள்-ஷாப்பிங் போய் கலக்கும் டெலிகாம...
      • ஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி மூ...
      • காங். செல்வாக்கு சரிவு-மோடி செல்வாக்கு உயர்வு
      • டெல்லி உயர்நீதிமன்றம் அருகே காரில் குண்டுவெடிப்பு?...
      • ரஜினிக்கு சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்:...
      • நானும் நடிகன்தான்! சச்சின் டெண்டுல்கர்
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.