இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் அனுப்பினால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும், என, அக்கட்சியின் மாநில துணை தலைவர் ராஜா கூறினார்.
பா. ஜ., மாநில துணை தலைவர் ராஜா, வேலூரில் செய்தியாளர்களிடம்,
‘’ இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு, இலங்கை அரசை கண்டிக்கவில்லை.
ராஜபக்சேவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக் கூடாது; இலங்கை படுகொலையை ஆதரிக்கும் காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க., முறித்துக் கொள்ள வேண்டும்; தமிழ்நாட்டில் 3,700 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கேபிள் மூலம் மின்சாரம் சப்ளை செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு மின்சாரம் அனுப்பினால், மக்களை ஒன்று திரட்டி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்’’என்று கூறினார்.
No comments:
Post a Comment