'சக்தி' தெலுங்கு படத்தில் நடித்த இலியானா, ‘'அப்படத்தில் சொன்னதுபோல் கதை எடுக்கவில்லை. ஹீரோவுக்காக பல்வேறு காட்சிகள் மாற்றப்பட்டது" என்று இயக்குனரை தாக்கி பேட்டி அளித்துடன் பட புரமோஷனுக்கு அழைத்தபோதும் செல்லவில்லை. இது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குனர், ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் இலியானாவின் செயலால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் செய்யப்போவதாக இயக்குனர் கூறி இருந்தார். இந்நிலையில் இவர்களுக்கு இடையேயான மோதல் முற்றுகிறது. இனிமேல் இலியானாவுடன் நடிப்பதில்லை என ஜூனியர் என்.டி.ஆர். முடிவு செய்திருக்கிறாராம். ஜூனியரின் இந்த முடிவால் த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட ஹீரோயின்கள் குஷியில் உள்ளார்களாம். ஜூனியர்இலியானா இடையிலான இந்த மோதல், ஷூட்டிங்கின்போதே யூனிட்டாருக்கு தெரிய வந்ததாம். தன் எதிரில் யாரும் சிகரெட் புகைக்கக்கூடாது என்று யூனிட்டாருக்கு இலியானா சொல்லி இருந்தாராம். அவரை கடுப்படிப்பதற்காகவே ஜூனியர் என்.டி.ஆர் சிகரெட் புகைத்து, அவர் பக்கம் ஊதித்தள்ளினாராம்.
No comments:
Post a Comment