வெயில் பிரியங்காவுக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் காதல் என்று சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்.
அவர் இது குறித்து கூறியது - செங்காத்து பூமியிலே படத்தை தொடர்ந்து மேலும் பல தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல, மலையாளத்தில் ஓர்ம மாத்திரம் என்ற படத்தில் முன்னணி ஹீரோ திலிப்புக்கு ஜோடியாக நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்தது என்னை மிகவும் வருத்தமடைய வைத்திருக்கிறது. 2012 ல் என்னுடைய பெற்றோர் சம்மதத்துடன்தான் எனக்கு திருமணம் நடக்கும். அதுவும் அவர்கள் பார்த்து யாரை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்களோ, அவரைதான் திருமணம் செய்து கொள்வேன். காதல் திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன் என்று கூறினார்.
நீர் குமிழியை மூடி வைக்க முடியாது. பார்க்கலாம் பிரியங்கா சொல்வது நிஜமாகுமா என்று!

No comments:
Post a Comment