அஜீத் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் அவரது 50வது படமான 'மங்காத்தா' விரைவில் வெளிவர உள்ளது. அஜீத்தின் பிறந்த நாளான 1ம் தேதி 'மங்காத்தா' படத்தின் ஒரு சின்ன டிரெய்லரை மட்டும் இணையத்தில் வெளியிட்டார்கள்.
இந்நிலையில் டிரெய்லரில் இடம் பெற்றுள்ள 'விளையாடு மங்காத்தா' பாடலை மட்டும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை வெளியிட முடிவு செய்து இருக்கிறது சோனி நிறுவனம்.
அது மட்டுமல்லாது, வெள்ளிக்கிழமை ( மே 13 ) வெளியாக உள்ள சுசீந்திரனின் 'அழகர்சாமியின் குதிரை' படத்தோடு மங்காத்தா படத்தின் ஸ்பெஷல் டிரெய்லரையும் வெளியிட முடிவு செய்து இருக்கிறது தயாரிப்பு தரப்பு
அர்ஜூன் தான் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றாலும், தற்போது வெளியாகியுள்ள மங்காத்தா ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்களில் அஜீத் போலீஸ் உடையணிந்து போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment