கல்கி பகவான் போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக ஏற்பட்ட தகவலை அடுத்து திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் பழம்பேட்டையில் வசிப்பவர் பாபு (50). இவரது மனைவி அலமேலு (38). இவர்கள் இருவரும் கல்கி பகவானின் தீவிர பக்தர்கள். இவர்கள் வீட்டில் கல்கி பகவான் படம் வைத்து தினமும் பூஜை செய்து வருகின்றனர்.
முக்கிய நாட்களில் சிறப்பு பூஜை, பஜனை பாடல் என நடத்தி பிறகு இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
வழக்கம் போல் கல்கி பகவான் படத்திற்கு அலமேலு பூஜை செய்துள்ளார். அப்போது, திடீரென கல்கி பகவான் படத்திலிருந்து வாய் பகுதியிலிருந்து, தேன் சிறிது சிறிதாக கொட்டியதாம்.
இதே போல நேற்று காலை மீண்டும் பூஜை செய்ய அலமேலு சென்ற போது, படத்தின் கீழே விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை கிடந்ததாம்.
இந்த தகவல் அக்கம் பக்கம் காட்டத்தீ போல பரவ அலமேலு வீட்டிற்கு பொது மக்கள் குவிந்தனர். அப்போது , சிலர் கல்கிபகவான் படத்திற்கு சூடம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

No comments:
Post a Comment