பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால் அல் கொய்தா மற்றும் அது தொடர்பான தீவிரவாத அமைப்புகள் தங்களது செயல்பாடுகளை ஆப்பிரிக்காவுக்கு இடம்மாற்றும் அபாயம் உள்ளதாக தென் ஆப்பிரிக்க பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான டாக்டர் சில்வஸ்டர் மபோசா கூறுகையில், ஆப்பிரிக்காவுக்கு தீவிரவாதம் வராது என்று கூற முடியாது. அல் கொய்தா தனது செயல்பாடுகளை ஆப்பிரிக்காவுக்கு இடம் மாற்றும் வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன. அல் கொய்தாவின் கடும் அடிச்சுவடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் பல உள்ளன. இங்கு இனி தீவிரவாத செயல்கள் தலை தூக்கலாம். இங்குள்ள இளைஞர்களை தீவிரவாத அமைப்புகள் பெருமளவில் வளைக்க முயலலாம்.
இதனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்றார்.
அனெலி போத்தா என்பவர் கூறுகையில், பின்லேடனைக் கொன்றது அமெரிக்காவுக்குப் பெரும் வெற்றியாக இருந்தாலும் அது நிச்சயம் அல் கொய்தைவின் முடிவு அல்ல. இப்போது அல் கொய்தாவினரின் கண்களுக்கு பின்லேடன் மிகப் பெரிய தியாகியாக உருவெடுத்துள்ளார். இது மேலம் பெரும் ஆபத்தாகவே முடியும் என்றார்.

No comments:
Post a Comment