பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பொன்னியின் செல்வன் கதையில் சில கற்பனை பாத்திரங்கள் சேர்த்து 3 மணி நேர கதையாக வசனங்களையும் எழுதி முடித்திருந்தார்.
இதில் விஜய் நாயகனாக நடிப்பதாக இருந்தது. அனுஷ்கா, ஆர்யா, சத்யராஜ், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தனர். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் வகையில் பலருக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்க இருந்தனர்.
இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் மணிரத்னதிற்கு தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் மூலம் ராணாவுக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது என்றும், ரஜினியை சந்தித்து இதைப் பற்றி பேசினார் மணி என்று சொல்கின்றனர்.
பொன்னியின் செல்வன் தமிழக அரசின் பொது உடைமை ஆக்கப்பட்ட கதை. யார் வேண்டு மானாலும் கதையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி பொது மேடையில் பாலச்சந்தர், உனக்கு படிப்பதற்கு பிடித்த கதை எது என்று கேட்க, ரஜினி கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென ’பொன்னியின் செல்வன்’ என்று பதிலளித்ததை பலரும் நினைவில் வைத்திருப்பார்கள்.
பொன்னியின் செல்வன் கதையில் உள்ள சில முக்கியமான திருப்பங்களும், சம்பவங்களும், ராணாவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது இயக்குநர் மணிக்கு. இதனால் ராணா ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மணி சார் இயக்கத்தில் படம் வெளிவர குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஆகும் என்பதாலும் பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டுள்ளது.
படம் கைவிடப்பட்டது குறித்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தேர்வு செய்த நட்சத்திரங்களை வைத்து அடுத்து படம் இயக்குவதற்காக முயற்சியில் வேறொரு கதை விவாதத்தில் இருக்கிறார் மணிரத்னம்.
இதற்கிடையில் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை இசபெல்லா மருத்துவமனையில் 7 நாளாக அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராணா பட வேலைகள் நின்று போய் உள்ளன.
அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ரஜினி ஆஸ்பத்திரியில் இருந்து வந்ததும் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெறும் என்று ராணா பட வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment