சிம்பு நடித்த “வானம்” படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப் படத்துக்கு சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாக பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “வானம்” படம் திரையிடப்பட்ட தியேட்டர்களிலும் போராட்டங்கள் நடத்தினர்.
பிரச்சினைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இதற்கு பதிலடியாக சிம்பு ரசிகர் தியாகராயநகரில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் “வானம்” படத்தில் நடத்த நடிகர்-நடிகைகளுக்கு சிம்பு விருந்து கொடுத்தார். படம் நன்றாக ஓடுவதற்காக இந்த விருந்து அளித்ததாக கூறப்பட்டது.
ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் “வானம்” படத்தில் நடித்த சோனியா அகர்வால், வி.டி.வி. கணேஷ், மற்றும் இயக்குனர் தரணி, நடிகை டாப்சி, நடிகர் சாந்தனு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment