ஊத்துக்கோட்டை அருகே பால்ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி வெங்கடேசன் (29). அந்த பகுதி ரஜினிமன்ற கிளை செயலாளராக இருந்தார். ரஜினி உடல்நிலை பற்றி வந்த வதந்தியால் வேதனையில் இருந்தார்.
இந்நிலையில், நண்பர் ராஜேசுக்கு நேற்று மாலை செல்போனில் பேசிய வெங்கடேசன், “தலைவர் ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் என்னால் தாங்கமுடியாது. எனவே, சாகப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அதற்கு நண்பர், “கவலைப்படாதே, ரஜினி உடல் நலம் தேறி வந்துவிடுவார்” என்று ஆறுதல் கூறியிருக்கிறார். இதன்பிறகு அவரது செல்போனுக்கு நண்பர் பேசியபோது செயல்படவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் வெங்கடேசன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

No comments:
Post a Comment