செல்வராகவனை விவாகரத்து செய்த பிறகுதான் சந்தோஷமா இருக்கேன் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார். டைரக்டர் செல்வராகவனின் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். பின்னர் செல்வராகவனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். குழந்தை இல்லாத நிலையில், செல்வாவுக்கும், சோனியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த சோனியா அகர்வால், இப்போது திரையுலகில் மறுபிரவேசம் எடுத்திருக்கிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடையணிந்து வந்து, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு வலைவிரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கும் சோனியா, சமீபத்தில் வானம் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டதால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், வானம் படத்தில் நல்ல கேரக்டர் அமைந்தது. என் நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் குவிக்கின்றன, என்று கூறியுள்ளார். நான் வாழ்க்கையில் எதற்கும் வருத்தப்பட மாட்டேன். எனது வாழ்க்கை இன்று வரை நிறைய படிப்பினைகளை தந்து கொண்டு இருக்கிறது. திரையுலக வாழ்க்கையில் செல்வராகவனுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டு உள்ளேன். அவர்தான் என்னை கண்டு பிடித்தார். நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வந்தார். ஆனால் சொந்த வாழ்க்கையில் எங்களுக்குள் ஒத்துப் போகவில்லை. எனவேதான் இப்போது வெளியே வந்து விட்டேன். இப்போது விவாகரத்துக்கு பிறகுதான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன், என்றும் சோனியா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
புதுப்பட வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கும் சோனியா, தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம்.

No comments:
Post a Comment