நாடெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவரது உடல் நிலை குறித்த முழு விபரத்தை அறிய ஆவலாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்கிறது மருத்துவமனை வட்டாரம். அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் உடலில் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வதந்திகளும் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டன.
இதற்கிடையில் மருத்துவமனை நிர்வாகம் ஒரு தகவல் கூட தங்கள் அனுமதியில்லாமல் வெளியே சென்று விடக் கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறதாம். ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் பணியாற்றும் இரண்டாம் நிலை ஊழியர்களுக்கும் நர்சுகளுக்கும் கூட எதையும் வெளியில் சென்று பேசக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்களாம்.
கல்லீரல் பிரச்சனையால்தான் செரிமான கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் அதே நேரத்தில் சிறுநீரகத்திலும் பிரச்சனை இருப்பதாக தகவல் கசிகிறது. ஆனால் அவர் முழுமையாக குணமாகிவிட்டார். இன்னும் இரண்டொரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர் குழு கூறியிருக்கிறது.
இதற்கிடையில் ராணா அழைப்பிதழில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா பெயர் இருக்கிறது. ஆனால், தனது மனைவி ஐஸ்வர்யா பெயர் இல்லையே என்று ரஜினியின் மருமகன் தனுஷ் சில வார்த்தைகள் பேச, அது ரஜினி காதுகளுக்கு வந்து அதனால் அவர் மனம் வருந்தியிருப்பதாகவும் இன்னொரு தகவல் கசிகிறது. இந்த பஞ்சாயத்தை இன்னொரு சந்தர்பத்தில் வைத்துக் கொள்ளலாமே தனுஷ்?

No comments:
Post a Comment