ராணாவில் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை பறித்த தீபிகா மீது பெரும் கோபத்தில் இருக்கிறார் அசின் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் அசின்.
பாலிவுட்டில் கஜினி என்ற ஒரேயொரு ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு இன்னும் முன்னணி நாயகி என்று வலம் வருபவர் அசின். தீபிகா படுகோனுக்குப் போட்டியாக இவரை மீடியா சித்தரிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழ் - இந்தியில் வெளியாகும் ரஜினியின் ராணா படத்தில் நாயகியாக முதலில் பேசப்பட்டவர் அசின்தான்.
ஆனால் பல்வேறு காரணங்களால் அசினை தள்ளி வைத்துவிட்டு தீபிகா படுகோனேயை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.
இதனால் தீபிகா படுகோன், அசின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி பாலிவுட் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளை மேற்கோள் காட்டி அசினிடம் கேட்டபோது, "சக நடிகர்-நடிகைகளுடன் நான் நட்பாகவே பழகுகிறேன். யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. தீபிகா படுகோனேக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம். நீ உயர்வா? நான் உயர்வா? என்ற சிந்தனைகள் எங்களுக்குள் எழுந்ததே இல்லை.
அதே போல ஜெனிலியாவுடனும் நல்ல நட்பு உள்ளது. என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் வருகின்றன. யாரையும் நான் காதலிக்கவில்லை.
அக்ஷய்குமாருடன் 'ஹவுஸ்புல்- 2' படத்தில் நடிக்க உள்ளேன். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. ராணாவில் நடிக்க முடியாமல் போனது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. மற்றபடி தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வராததால் நடிக்கவில்லை. இவற்றில் தீபிகாவின் வாய்ப்பு எதையும் நான் பறிக்கவில்லை..", என்றார்.

No comments:
Post a Comment