கிட்டதட்ட ஒன்றரை வருட காலம் திடீர் வெற்றிடம் ஆகியிருக்கிறது ஆர்யாவின் கால்ஷீட் டைரியில். வரிசையாக அவர் ஒப்புக் கொண்ட படங்களின் ஷெட்யூல் திடீர் கொலாப்ஸ் ஆனதுதான் காரணம்.
லிங்குசாமியின் வேட்டை படத்தை முடித்துவிட்டு பிரபுசாலமன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தார். அதை லிங்குசாமியே தயாரிப்பதாக இருந்தது. ஆனால் மைனாவையே இந்தியில் இயக்கிக் கொடுங்களேன் என்றார்களாம். தலைவர் இந்தி படிக்க போய்விட்டார். அப்புறம் மிஷ்கின் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருந்தார். அந்த படமும் பட்ஜெட் காரணமாக இழுபறியில் தள்ளாட இடையில் மிஷ்கின்-சிம்பு சந்திப்பு நடந்திருக்கிறது. எனவே ஆர்யா-மிஷ்கின் இப்போது இல்லை என்றாகிவிட்டது.
இவ்வளவுக்கு இடையிலும் தானாக ஆர்யாவே போய் கேட்ட வாய்ப்புதான் பொன்னியின் செல்வன். இந்த ஒரு காரணத்துக்காகவே ஆர்யாவை ராஜாவாக்கினார் மணிரத்னம். கடைசியில் அந்த படமும் கைவிடப்பட்டதாக தகவல். இந்த திடீர் பாறாங்கல் மழை ஆர்யாவின் தேதிகளின் மீதுதானா விழ வேண்டும்?
ஆனால் ஆர்யா யாரை கை காட்டினாலும் அவருக்கு பைனான்ஸ் ரெடி என்று கரன்ஸி மூட்டையோடு கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறார்கள் பைனான்சியர்கள். ஆர்யாவுக்கு புடிச்சிருந்தா உடனே அட்வான்சை கொடுத்திரலாம் என்று சுற்றி சுற்றி வருகிறார்கள் தயாரிப்பாளர். நிலவரம் அப்படியிருக்க, இதற்கெல்லாமா கவலைப்பட போகிறார் அவர்?

No comments:
Post a Comment