இளைஞர்களின் ஏக்கத்தை போக்க வரும் என எதிர்பார்த்திருந்த சாந்தி, சவுண்ட் பிரச்னையால் தாமதமாகிக் கொண்டிருக்கையில் சத்தமில்லாமல் சாந்தி சாயலில் உருவாகியிருக்கிறது ஒரு படம். கேரளாவில் 100 நாட்களை கடந்து ஓடிய கயம் என்ற படத்தின் தமிழாக்கமான அந்த கிளுகிளு படத்திற்கு தாரம் என பெயர் சூட்டியிருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட நகரங்களில் சுவர்களை மறைத்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் கண்களை உறுத்தும் போஸ்டர்களே படத்தின் கதையை சொல்லும் விதமாகத்தான் உள்ளது. சிவப்பு நிற மேலாடை அணிந்து கிக் ஆக போஸ் கொடுத்திருக்கும் கேரள அழகி ஸ்வேதா மேனன் இந்த படம் ரீலிஸ் ஆனால் நம்ம ஊர் சோனா, நமீதாவையெல்லாம் மிஞ்சி விடுவார் போலிருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் தாரம் இசை வெளியீ்டடு விழா நடந்தது. ஸ்வேதாவின் டாப் மோஸ்ட் அழகை போஸ்டர்களில் பார்த்த ரசிகர்கள் பலர் அழைக்காமலேயே அரங்கத்தை முற்றுகையிட்டனர். எல்லோரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்பதால் ஒரு சிலர் மட்டும் அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஸ்வேதாவை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட 2 கிக் பாடல்களை பார்த்து கிறங்கினார்கள் ரசிகர்கள்.
சரி... போஸ்டர் மற்றும் பாடல்களில் சூடேற்றிய தாரம் படத்தின் கதை என்னவாம்? அங்கேதான் இருக்கிறது இன்னுமொரு கிளுகிளு தத்துவம். ஒரு ஊர் பண்ணையாரிடம் சிக்கி தவிக்கும் பெண்ணை மீட்டு அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறான் ஒருவன். அன்போடு வாழும் அந்த காதலை சிதைக்கும் விதத்தில் அவனை கொன்றுவிடுகிறது ஒரு கும்பல். அதற்காக கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கும் ஸ்வேதா சிறிது நாட்களிலேயே அவனது தம்பி மீது காதல் கொள்கிறாள். கல்யாணமும் செய்து கொள்கிறாள். விடுவார்களா? பேச்சுக்கு பேச்சு நாட்டாமை. உங்க மனைவி செத்தா அவளோட தங்கச்சியை கட்டிக்கிறீங்க. நாங்க மட்டும் கணவரோட தம்பிய கட்டிக்க கூடாதா என்கிறாள் அவள். இதுதான் படத்தின் புரட்சி கதை.
தாரத்தில் எது எது தூக்கலாக இருக்க வேண்டுமோ, அதெல்லாம் தூக்கலாக இருப்பதால் படத்தை வாங்க இப்பவே கோடம்பாக்கத்தில் அடிதடியை ஆரம்பிச்சிட்டாங்கன்னா பார்த்துக்கோங்களேன்
நான் ஃபர்ஸ்ட்
ReplyDelete