பொன்னியின் செல்வன் டிராப் ஆனதில் ஒரு ஹீரோவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாம். இந்த செய்தி நெட்டில்தான் முதலில் வந்தது. இதை படித்த அடுத்த வினாடியே முக்கியமான நிருபர்களுக்கு போன் அடித்தார் அவர். சார்... நான் ஒரு நியூஸ் படிச்சேன். நெசம்தானா அது? கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்களேன். இப்படி பலருக்கும் போன் போட்டு, ஆமாம். நிஜம்தான் என்று கேள்விப்பட்டதும்தான் நிம்மதியாக து£ங்க போனாராம்.
அதற்கும் ஒரு காரணம் இருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வெகு காலமாகவே இருக்கிறது. சரித்திரக்கதைக்கு பொறுத்தமாக அகண்ட தோள்கள். அரிவாள் மீசையெல்லாம் கூட இருக்கிறது. இதே டைப் படம் ஒன்றிலும் சமீபத்தில்தான் நடித்து முடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விஜய், மகேஷ்பாபு என்று பலரையும் அழைக்கிற அவர், தன்னை அழைத்தால் என்ன? என்ற ஏக்கமும் இருந்ததாம். ஆனால் கடைசிவரை அந்த நல்ல செய்தி அவரை எட்டவே இல்லை.
அப்புறம் என்ன? இந்த படம் டிராப்பானால் அவரை விட சந்தோஷப்படுகிறவர்கள் யாராக இருக்க முடியும்? இன்னுமா புரியவில்லை யார் அந்த நடிகரென்று? நம்ம பிரசாந்தேதான்.


No comments:
Post a Comment