என்ன அநியாயம்யா இது? நடிகர் நடிகைகள் என்றால் அவங்களுக்கும் குடும்ப பிரச்சனைகள் இருக்காதா? இதையெல்லாம் ஒரு செய்தியா எழுதணுமா என்று கோபித்துக் கொள்பவர்கள் கொள்ளட்டும்... ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு அவர் போகவில்லை என்பது எவ்வளவு முக்கியமான தகவல்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக்குடைய திருமண நிச்சயதார்த்தம் நடந்ததல்லவா? ஈரோடு பக்கத்தில் இருக்கிற கிராமத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு சூர்யா வருவார். கார்த்தி வருவார் என்று கண்களில் ஆர்வம் மின்ன காத்திருந்தது ஒரு கூட்டம். அவர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடந்த இன்னொரு நட்சத்திரம் ஜோதிகா.
ஆனால் கொழுந்தனின் நிச்சயதார்த்தத்திற்கு அவர் வரவில்லையாம். அக்கம் பக்கத்து ஊர் காரர்கள் கூட இந்த நட்சத்திர குடும்பத்தின் வருகையை பற்றி ஆவலோடு பேசி சிலாகித்து கொண்டிருந்தாலும் ஜோதிகாவின் ஆப்சென்ட் அவர்களை அப்செட் ஆக்கியது நிஜம்தானாம்.
நீண்ட தூர பயணம் குழந்தைக்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதால்தான் பொறுப்பான அம்மாவாக இந்த பயணத்தை தவிர்த்தாராம் ஜோதிகா. அதனாலென்ன, கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே போனா போச்சு....

No comments:
Post a Comment