கடந்த 10 வருடங்களாக உலகளாவிய தீவிரவாத செயல்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்கமாக செயல்பட்ட இயக்கம் அல்கொய்தா. இதன் தலைவனாக இருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் சுட்டு கொல்லப்பட்டான். இருந்தபோதும் இந்த இயக்கத்தில் பின்லேடனுடன் இயக்க செயல்பாடுகளில் உதவியாக இருந்தவர்கள் பற்றிய சில விவரங்கள்:-
1) அபு யஹ்யா அல்-லிபி: அல்கொய்தா இயக்கத்தில் ஜிஹாத் என்னும் புனித போரில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தான். பின்லேடனுடன் அதிகமாக தொடர்பு கொண்டவன். பல வீடியோ காட்சிகளில் தோன்றி அல்கொய்தா இயக்கத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளான். தனது 40 வயதில் இவ்வியக்கத்தின் செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டு இருந்தான். தற்போது அவன் இருப்பிடம் தெரியவில்லை.
2) அபு பராஜ் அல்_லிபி: அபு பராஜ் நிலையான, திறமையான மற்றும் பிறரால் எளிதாக கணிக்க முடியாத அளவிற்கு தீவிரமாக இயக்கத்தின் வெளிப்புற நடவடிக்கைகளில் செயலாற்றி வந்துள்ளான். கைது செய்யப்படும் வரை பின்லேடனுக்கு பல வழிகளில் உதவியாக இருந்துள்ளான். கடந்த 2005ல் பாகிஸ்தானில் மர்தான் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டு தற்போது கவுன்டனாமோ என்ற இடத்தில் உள்ளான்.
3) அபு ஜுபாயத்: பின்லேடனின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளான். ஆனால் தலைமை பதவி எதுவும் வகிக்கவில்லை. அமெரிக்கா இவனை பற்றி சற்று அதிகமாகவே அச்சம் கொண்டிருந்தது என்றால் மிகையல்ல. கடந்த 2002ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பைசலாபாத்தில் கைது செய்யப்பட்டு தற்போது கவுன்டனாமோ என்ற இடத்தில் உள்ளான்.
4) மொஹம்மத் அடெப்: அல்&கொய்தா இயக்கத்தின் ராணுவ நடவடிக்கைகளில் தலைமையேற்று நடத்தி சென்றுள்ளான். சிறந்த கமாண்டராக இருந்துள்ளான். கடந்த 1990&ஆம் வருட இறுதியில் மிக தீவிரமாக தனது செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தான். இந்நிலையில் காபூல் என்னுமிடத்தில் 2001&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டான். சிறந்த போராளியாகவும் மற்றும் இரக்கமற்றவனாகவும் இருந்த அடெப், ஒசாமா பின்லேடனின் நம்பிக்கைக்கு உரியவனாக விளங்கினான். தற்போது அவன் உயிருடன் இல்லை 5) அய்மன் அல்_ஜவாஹிரி: தற்போது, பின்லேடனுக்கு அடுத்தபடியாக தலைமை பதவியேற்க தகுதி படைத்தவராக 60 வயதை நெருங்கிய அல்&ஜவாஹிரி கருதப்படுகிறார். எகிப்து நாட்டின் இஸ்லாமிய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்ததால் அந்நாட்டிலேயே சிறை வைக்கப்பட்டடார். பயிற்சி பெற்ற மருத்துவரான இவர் பின்லேடனின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டார். பல திட்டங்களை செயல் வடிவம் பெற செய்வதற்கு இவர் அல்&கொய்தாவுடன் சுமார் 15 வருடங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. தற்போதுள்ள இடம் தெரியவில்லை.
6) காலித் ஷேக் மொஹம்மத்: அமெரிக்காவில், செப்டம்பர் 11ல் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்தவர்களில் இவனும் ஒருவன். அவ்வப்போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது இவனது வழக்கம். பின்லேடனுடன் நெருங்கிய நட்பொன்றுமில்லை. மேலும், தீவிரவாதத்திற்கான உறுதிமொழி எடுக்க மறுத்து விட்டான். ஆனால் தீவிரவாத செயல்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தான். திறமையான மற்றும் பிறரை வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவன். கடந்த 2003&ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ராவல்பிண்டி என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டு தற்போது கவுன்டனாமோவில் உள்ளான்.
7) அப்துல் ஹாதி அல்_இராகி: குர்திஷ் இனத்தை சேர்ந்தவன். பின்லேடனின் நம்பிக்கைக்கு உரியவனாகவும் திறமையான போர் வீரனாகவும் விளங்கியவன். கடந்த 2007&ஆம் வருடம் ஈராக் நாட்டில் அல்கொய்தா இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக பின்லேடனால் அனுப்பப்பட்டான். எனினும் ஈரான் நாட்டு எல்லையில் கைது செய்யப்பட்டான். தற்போது கவுன்டனாமோவில் உள்ளான். இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் தீவிரவாத செயல்களை நடத்துவதில் பெரும் பங்கு வகித்தான். அவனது கைது இயக்கத்திற்கு பேரிழப்பு ஆகும்.
8) அபு முசாப் அல்_சூரி: தீவிரவாத இயக்கத்தின் முக்கிய குறிக்கோளான ஜிகாத் என்னும் புனித போருக்கு பல வழிகளில் திட்டம் தீட்டுவதில் வல்லவனாக இருந்துள்ளான். உலகளவில் தீவிரவாதத்தை செயல்படுத்துவதில் ஆலோசனை கூறுவதிலும், தீவிரவாத ஆதரவு பிரசாரம் மேற்கொள்வதிலும் ஈடுபட்டிருந்தான். எனினும், பின்லேடனுடன் எப்போதும் ஒத்து போகவில்லை. மேலும் அதற்கு விருப்பமுமில்லை. கடந்த 2005ல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு தற்போது அவனது சொந்த நாடான சிரியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளான்.
9) சயிப் அல்_ஏடல்: எகிப்து நாட்டின் சிறப்பு படையின் முன்னாள் அதிகாரி. சிறந்த அறிவும், அனுபவமும் வாய்ந்த இவன் 2002ம் ஆண்டில் இருந்து ஈரான் நாட்டு சிறையில் உள்ளான். பின்லேடனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தான் என முன்பு கூறப்பட்டாலும் தற்போது எவ்வித தொடர்பும் கிடையாது.
10) அன்வர் அல்_அவ்லாகி: ஏமன் நாட்டை பூர்விகமாக கொண்ட அன்வர் நியூ மெக்சிகோவில் பிறந்தாலும் ஏமன் நாட்டில் தான் வளர்ச்சி அடைந்தான். 40 வயதை கடந்த இவன் ஆங்கிலம பேசுவதில் புலமை பெற்றவனாதலால் இணையதளங்களில் உரையாடினான். அதன் வழியே தீவிரவாதத்தை உலகெங்கும் பரப்பினான். அல்&கொய்தாவின் சார்பில் வெளியான பத்திரிகை ஒன்றின் செய்திகளில் தனது கருத்துக்களை பகிரங்கப்படுத்தியிருந்தான். பின்லேடன் இருந்தவரையில் அந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்க இயலாவிடினும் தற்போது பின்லேடனின் மறைவு அன்வருக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது. தற்போதுள்ள இருப்பிடம்: தெரியவில்லை
11) அபு முசாப் அல்_ஜர்கவி: ஈராக் நாட்டின் அல்கொய்தா இயக்க தலைவனான அபு முசாப் ஜோர்டான் நாட்டை சேர்ந்தவன். சாதாரண உள்ளூர் ரவுடியாக தனது ஆரம்பகாலத்தை தொடங்கிய அபு பின்னாளில் பெரிய தாக்குதல்களில் ஈடுபட்டான். ஷியா பிரிவு முஸ்லிம்களை தாக்குவதும் அவர்களது தலைகளை அறுப்பதும் வீடியோவில் வெளிவந்தபோது பரபரப்பை ஏற்படுத்தினான். அல்கொய்தா இயக்கத்தோடு அதிகமாக தொடர்பு கொண்டிருந்த இவன் கடந்த 2006ல் அமெரிக்க படையினரின் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டான்.
No comments:
Post a Comment