நெல்லை மாவட்டம் ஊத் துமலை அருகே உள்ள கைப்பனாங் குளத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் முத்து(27). தற்போது கோவை உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் வசித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள நாரணா புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோட்டி யப்பன்(35). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் உத்தமபாளையம் பகுதிக்கு கோட்டியப்பன் வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேலை செய்த குருசாமி மகள் முத்துவுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப்பழகியதால் முத்து கர்ப்பமானார். தற்போது அவருக்கு 5 மாத குழந்தை உள்ளது.
இதையடுத்து தன்னை திருமணம் செய்யுமாறு கோட்டியப்பனிடம் முத்து வற்புறுத்தி வந்தார். ஆனால் தட்டிக்கழித்து வந்த கோட்டியப்பன் திடீரென சொந்த ஊரான நாரணபுரத்திற்கு வந்துவிட்டார்.
இதையறிந்த முத்து நேற்று முன்தினம் இரவு நாரணபுரத்திற்கு வந்து முத்துவிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தினார். அவர் மறுத்ததால் மனமுடைந்த முத்து விஷம் குடித்து அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே மயங்கி விழுந்து இறந்தார்.
இதுதொடர்பாக சப்&இன்ஸ்பெக்டர் உஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
No comments:
Post a Comment