இரண்டாம் உலகம் படத்தில் இருந்து ஆண்ட்ரியா நீக்கப்பட்டதால் தனுஷ்- செல்வராகவன் இடையே மோதல் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாம் உலகம் படத்தின் நாயகனாக நடிகரும், செல்வராகவனின் தம்பியுமான தனுஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தமாகி, 50 சதவீத சூட்டிங்கும் நடந்தேறிவிட்டது. இந்நிலையில் செல்வா - ஆண்ட்ரியா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து ஆண்ட்ரியாவை நீக்கப்பட்டார். (செல்வா - சோனியா அகர்வால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ததற்கு ஆண்ட்ரியாதான் காரணம் என்பது தனி கதை).
ஆண்ட்ரியா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக புதுமுகம் ரிச்சா நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். சிலபல சிக்கல்களுக்கு பிறகு புதிய நாயகியை வைத்து படம்பிடிக்க நினைத்த செல்வா, நாயகன் தனுஷிடம் கால்ஷீ்ட் கேட்டிருக்கிறார். ஏற்கனவே ஆண்ட்ரியாவுடன் நடித்த அதே காட்சியை புதுமுகம் ரிச்சாவுடன் நடிக்கும்படி கேட்டதால் கோபமடைந்த தனுஷ், அட போண்ணா... உனக்கு வேற வேலையே இல்லை என்கிறாராம் எரிச்சலுடன். நீ கேட்கும்போதெல்லாம் என்னால் தேதி தர முடியாது. நான் எப்ப சொல்றேனோ அப்போ படத்தை எடுத்துக்கோ என்று கூறிவிட்டாராம். உன்னை வளர்த்ததே நான்தான். நான் இல்லேன்னா தனுஷ்னு ஒரு நடிகனே இல்லை என்று செல்வாவும், அதுக்காக எவ்வளோ செஞ்சாச்சு. இன்னும் வாட்டி எடுக்காதே என்று தனுசும் மாறி மாறி வாதம் செய்து கொண்டிருக்க மோதல் முற்றியிருக்கிறது. இந்த மோதலை முறிக்க தந்தைக்குலம் ரொம்பவே முயற்சி செய்து கொண்டிருக்கிறதாம்.

No comments:
Post a Comment