போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய கன்னட டி.வி. நடிகை மைத்ரேயி நேற்று கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் தனது தோழிகள் சுப்ரியா, ரேகா, ரூபா ஆகியோருடன் மைத்ரேயி காரில் வந்தார். அவர்களது கார் கிரியாஸ் சந்திப்பு சிக்னலில் நிற்காமல் சென்றது.
அப்போது, அங்கு விஜயநகர் போக்குவரத்து போலீசார் சிவகுமார் பணியில் இருந்தார். அவர் நடிகை மைத்ரேயி சென்ற காரை நிற்கும்படி கையை காட்டினார். இருந்தும், அவர் காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.
இது குறித்து அவர் மற்ற போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அருகிலேயே கார் மடக்கி நிறுத்தப்பட்டது. அதனால் ஆத்திரம் அடைந்த மைத்ரேயிடம் அவரது தோழிகளும் சேர்ந்து அங்கு வந்த போலீஸ்காரர் சிவக்குமாருடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவரை கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, போலீசார் நடிகை மைத்ரேயி அவரது தோழிகள் சுப்ரியா, ரூபா, ரேகா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பிறகு அவர்கள் மாஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment