நடிகர் ரஜினி குணமடைய அவரது ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினி பூரண குணம் அடைய வேண்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 06.05.2011 அன்று காலை ரஜினிகாந்த் ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் 61 தேங்காய் உடைத்தனர். பின்னர் அவர்கள் சாமிக்கு 61 லிட்டர் பால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளர்களும், ரஜினி ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment