செல்வராகவனும் கமலும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள். ஆனால் ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் எப்படி இருக்க முடியும்? என்று நாம் அப்போதே எழுதியிருந்தோம். இப்போது கத்திகள் உரச ஆரம்பித்துவிட்டதாக தகவல் பரவிக்கிடக்கிறது கோடம்பாக்கத்தில்.
கமல்-சோனாக்ஷி சின்ஹா என்ற கலர்ஃபுல் காம்பினேஷனுடன் படம் எடுக்க புறப்பட்டார் செல்வா. ஆனால் விசா கிடைக்கததால் வெளிநாட்டில் நடக்கவிருந்த படப்பிடிப்பு தள்ளிப் போனதாக கூறப்பட்டது. நிஜமாகவே விசா கிடைக்கவில்லையா, அல்லது வேறு ஏதாவதா... என்ற சந்தேகப் பார்வையோடு இந்த விஷயத்தை பின்பற்றியவர்களுக்கு சமீபத்தில் நடந்ததாக சொல்லப்படும் ஒரு செய்தி அதிர்ச்சியாக இருக்கும்.
கடந்த சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் அலுவலகத்திற்கு சென்றாராம் செல்வராகவன். பல மணி நேரங்கள் காத்திருந்தாராம் அவரை சந்திக்க. இவர் வந்திருக்கிற தகவல் அறிந்த கமல், வெளியே வரவே இல்லையாம். உள்ளேயும் வரச்சொல்லவில்லையாம். பொறுமையின் எல்லையை தொட்டு விட்டு திரும்பிய செல்வா, பொசுக்கென்று எழுந்து வெளியேறிவிட்டாராம். நல்லவேளையாக தனது 'விஸ்வரூபத்தை' கமலிடம் காட்டவில்லையாம் அவர்!

No comments:
Post a Comment