பூ, களவாணி போன்ற படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய எஸ்.எஸ்.குமரன், புதிதாக இயக்குநராக அவதாரம் செய்திருக்கும் படம் தேனீர் விடுதி, இனிது இனிது படத்தின் நாயகன் ஆதித் மற்றும் புதுமுகம் ரேஷ்மி நடித்திருக்கின்றனர். பந்தல் நடும் தொழில் செய்யும் பையனுக்கும், பலசரக்கு கடை நடத்தும் பெண்ணுக்கும் இடையே உண்டாகும் காதல் தான் படத்தின் கதை. வழக்கமான காதல் கதையை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும், கலகலப்பாகவும் எடுத்திருக்கிறார் குமரன். மேலும் படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார். படத்தில் மொத்தம் மூன்றே மூன்று பாடல்கள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் காட்சிகள் அனைத்தும் முடிவடைந்து, படத்தை திரையிடுவதற்கான வேலை நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு சான்று வழங்கியுள்ளனர். அத்துடன் படத்தின் இயக்குநர் குமரன் முதல் படம் எடுத்தது போன்று தெரியவில்லை, நிறைய அனுபவம் வாய்ந்த இயக்குநர் போல இப்படத்தை இயக்கியுள்ளார் என்று பாராட்டியுள்ளனர். மேலும் படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட கட் செய்யாமல் யு சான்று வழங்கியுள்ளனர். தேனீர் விடுதி ஜூன் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அப்ப படம் நல்லா இருக்கும் போல தெரிகிறதே... வாழ்த்துக்கள்
ReplyDelete